×

நடந்து சென்ற கர்ப்பிணியை ஜீப்பில் அனுப்பி வைத்த இன்ஸ்.: குவியும் பாராட்டுகள்

பெரம்பலூர்: பெரம்பலூரில்  நடந்து சென்ற கர்ப்பிணியை போலீஸ் ஜீப்பில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்த  இன்ஸ்பெக்டருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோபிநாத்  உள்ளிட்ட போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நிறை  மாத கர்ப்பிணி ஒருவர் அவ்வழியே நடந்து வந்தார். அவரிடம் விசாரித்தபோது  துறைமங்கலத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  பரிசோதனைக்காக சென்று விட்டு சங்குப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு நடந்து  செல்வதாக தெரிவித்தார்.

உடனே இன்ஸ்பெக்டர் அருகிலிருந்த காவலர் அரவிந்தனை அழைத்து தனது ஜீப்பில் கர்ப்பிணியை ஏற்றி அவரது வீட்டில் இறக்கி விட்டு வருமாறு கூறி அனுப்பி வைத்தார். இந்த காட்சி தற்போது சமூக வலை தளங்களில்  வைரலாக பரவி வருகிறது.  கடமை உணர்வுக்கிடையே கர்ப்பிணி  பெண்ணிடம் பரிவு காட்டிய இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags : Inns , Pregnant, Ins., Accumulating Compliments
× RELATED காவல் நிலையத்தில் பட்டப்பகல் களேபரம்...